போலந்து, பல்கேரிய நாடுகளுக்கு எரிவாயு வழங்கலை நிறுத்தியது ரஷ்யா
ரஷ்யாவின் கேஸ்புரோம் நிறுவனம் போலந்து, பல்கேரியா நாடுகளுக்குக் குழாய்ப்பாதை மூலம் எரிவாயு வழங்குவதை நிறுத்தியுள்ளது.
போலந்து, பல்கேரிய நாடுகளுக்கு எரிவாயு வழங்குவது புதனன்று நிறுத்தப்படும் என கேஸ்புரோம் நேற்றே அறிவித்திருந்தது. அதன்படி எரிவாயு வழங்கலை இன்று நிறுத்திக் கொண்டது.
போலந்தின் சேமிப்புக் கிடங்குகளில் மொத்தக் கொள்ளளவில் 76 விழுக்காடு அளவுக்கு எரிவாயு இருப்புள்ளதாகவும், தேவையான எரிவாயுவைப் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியும் என்றும் அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் எரிவாயு இறக்குமதிக்கான தொகையை ரூபிளில் செலுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வழங்கல் நிறுத்தப்படும் என்றும் ரஷ்யா தெரிவித்திருந்தது.
இதை ஏற்க மறுத்த ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து யூரோ அல்லது டாலரிலேயே தொகையைச் செலுத்தப்போவதாக அறிவித்தன.
ரூபிளில் தொகையைச் செலுத்த மறுக்கப்பட்டதா என்பதை பல்கேரிய எரியாற்றல் அமைச்சகம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
Comments