கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்கள் சிறப்பு ஒதுக்கீடு ரத்து - மத்திய அரசு
மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 1,248 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அப்பள்ளிகளில் ஒவ்வொரு எம்.பி.யும் 10 மாணவர்களை சேர்க்க பரிந்துரை செய்யலாம்.
இந்த நிலையில், எம்.பி.க்களுக்கான ஒதுக்கீட்டை திடீரென மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மத்திய கல்வி அமைச்சக ஊழியர்களின் குழந்தைகள், ஓய்வுபெற்ற கேந்திரிய வித்யாலயா ஊழியர்களின் குழந்தைகளுக்கான ஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே சமயத்தில், வீரதீர செயலுக்கான விருது, பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா உள்ளிட்ட விருதுகள் பெற்றவர்களின் குழந்தைகள், உளவுப் பிரிவு ஊழியர்களின் குழந்தைகள் ஆகியோருக்கான ஒதுக்கீடு தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தலா 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Comments