பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்த மாணவர்களை தோப்புக்கரணம் போடச் சொல்லி போலீசார் அறிவுரை

0 4135

ஆவடியில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை கீழே இறக்கி தோப்புக்கரணம் போட வைத்தனர்.

நேற்று மாலை ஆவடி குற்றப்பிரிவு ஆய்வாளர் அருணாச்சல ராஜா தலைமையில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆவடியில் இருந்து கண்ணியம்மன் நகர், கோயில்பதாகை, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மாநகர பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

இதனை அடுத்து 20க்கும் மேற்பட்ட மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கிய போலீஸார் பின்னர் அவர்களை தோப்புக்கரணம் போட வைத்தனர். மேலும் அவர்களுக்கு தகுந்த அறிவுரைகளைக் கூறி எச்சரித்து வீட்டிற்கு அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments