இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் புதிதாக அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் - அமைச்சர் சி.வி.கணேசன்
இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் புதிதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த 500 பெண் ஓட்டுநர்கள் புதிதாக ஆட்டோ ரிக்சா வாங்க தலா ஒரு லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நல வாரியத்தில் பதிவு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு நலத்திட்ட உதவித்தொகை ஆறாயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments