பட்டா மாற்றம் செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம்...கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்!

0 2900

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் செய்வதற்கு விவசாயியிடம் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக நில அளவையாளரும், கிராம நிர்வாக உதவியாளரும் கைது செய்யப்பட்டனர்.

நீலகண்டன் என்ற விவசாயி, தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.

பட்டா மாறுதல் செய்வதற்கு நில அளவையாளரான சிவா தங்கராசும், கிராம நிர்வாக உதவியாளரான ஆனந்தனும் நீலகண்டனிடம் 6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நீலகண்டன் அளித்த புகாரின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பிய அதிகாரிகள், அந்த பணத்தை பெறும் போது இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments