பூரண மதுவிலக்கு கொண்டு வருவதாக திமுக தேர்தல் அறிக்கையில் எங்கும் குறிப்பிடவில்லை - அமைச்சர் செந்தில்பாலாஜி!

0 5243

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவதாக திமுக தேர்தல் அறிக்கையில் எங்கும் குறிப்பிடவில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ.தங்கமணி, எதிர்க்கட்சியாக இருந்த போது பூரண மது விலக்கு, மதுபான கடைகள் எண்ணிக்கை குறித்து பேசிய திமுக தற்போது என்ன முடிவு எடுக்கப் போகிறது என கேள்வி எழுப்பியதோடு, புதிதாகவும் மதுபான கடைகள் திறக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, மதுவிலக்கு கொண்டு வருவதாக திமுக தேர்தல் அறிக்கையில் எங்கும் கூறவில்லை என்றதோடு, புதிதாக கடைகள் எங்கும் திறக்கப்படவில்லை எனவும், ஏற்கனவே இருக்கும் கடைகள் தான் மக்களின் எதிர்ப்பை அடுத்து வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments