நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு...கால்நடைகளை மேயவிட்டு செடிகளை அழிக்கும் விவசாயிகள்!
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நோய் தாக்குதலால் காலிபிளவர் விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில், விளைந்த காலிபிளவர் செடிகளை கால்நடைகளை மேய விட்டு விவசாயிகள் அழித்து வருகின்றனர்.
பாலமேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் காலிபிளவர் பயிரிடப்பட்டுள்ளது.
அறுவடை செய்யும் நேரத்தில் அதிக வெப்பம் மற்றும் மர்ம நோய் தாக்குதலால் காலிபிளவர் பூக்கள் சிவப்பு நிறமாக மாறியதோடு மேல் பகுதியில் நுரை தள்ளியதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதனால், ஏக்கருக்கு 45 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வேறு வழியின்றி ஆடு, மாடுகளை மேயவிட்டு விளைந்த செடிகளை அழிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
நோய் தாக்குதலுக்கு உள்ளான செடிகளை தோட்டக்கலைத் துறையினர் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
Comments