வல்லூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் 500 மெ.வா மின் உற்பத்தி பாதிப்பு.. முதலாவது அலகில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிப்பு

0 3893
வல்லூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் 500 மெ.வா மின் உற்பத்தி பாதிப்பு.. முதலாவது அலகில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வல்லூர் அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி 3-வது அலகில் கொதிகலன் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

அது நேற்று சீரான நிலையில், இன்று முதலாவது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் அனல் மின் நிலைய ஊழியர்கள ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments