ரவுடிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அவசரநிலை நீட்டிப்பு.. எல் சால்வடார் அதிபர் நயிப் புகேலே அதிரடி
எல் சால்வடார் நாட்டில் அதிகரித்து வரும் ரவுடி கும்பல்களில் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அவசரநிலை நடவடிக்கைகள் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளில் இல்லாத அளவாக கடந்த மாதம் ஒரே நாளில் ரவுடி கும்பல்களால் 62 பேர் கொல்லப்பட்டனர். அதனையடுத்து அவசர நிலையை அறிவித்த அதிபர் நயிப் புகேலே அரசு, இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்துள்ளது.
பொது இடங்களில் ஒன்று கூட தடை, தகவல் பரிமாற்றத்தில் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இவை மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பதாக ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Comments