வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

0 3399
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் 8 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகங்கள் மற்றும் நாசரேத், வீரசோழன், நாச்சியார்கோயில், உள்ளிக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகங்களை அவர் திறந்து வைத்தார். மேலும், காரைக்குடியில் 2 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments