கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு.. 3 குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயம்

0 2971
கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு.. 3 குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 3 குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது குடும்பத்தினருடன் வேனில் திருநள்ளாறு கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தார். சிதம்பரம் அருகே சோனங்சாவடி பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க டிரைவர் வேனை திருப்ப முயன்றுள்ளார்.

வேகமாக சென்ற வேனை திடீரென திருப்ப முயன்றதால், வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தப்பியோடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments