நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் பார்ப்பதில் தகராறு.. பீர்பாட்டில் மற்றும் கத்தியால் தாக்கி இளைஞர் படுகொலை

0 7329
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் பார்ப்பதில் தகராறு.. பீர்பாட்டில் மற்றும் கத்தியால் தாக்கி இளைஞர் படுகொலை

சென்னை அம்பத்தூரில் பீஸ்ட் படம் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அம்பத்தூர் சிவானந்த நகரைச் சேர்ந்த லோகேஷ் என்ற கார்த்திக் என்பவர்  தனது தம்பி வெங்கடேசுடன் அம்பத்தூர்- வானகரம் நெடுஞ்சாலை, கலைவாணர் நகரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று இருவரும் கம்பெனியில் பணி முடிந்து வெளியே வந்த போது 10பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கியுள்ளது. அப்போது வெங்கடேஷ் தப்பி ஓடி விட்ட நிலையில்  லோகேஷை அந்த கும்பல் சரமாரியாக  பீர் பாட்டிலால் தாக்கியும் கத்தியால் வெட்டியும் படுகொலை செய்துள்ளது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 10பேரை கைது செய்தனர். விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள திரையரங்கில் நடிகர் விஜய் நடித்த பீட்ஸ் படம் பார்க்கும் போது ஏற்பட்ட பிரச்சனையில் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments