பக்ரைனில் கடந்த ஒரு வருடமாக வேலையின்றி தவித்து வரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தங்களை மீட்க கோரி கண்ணீர் மல்க கோரிக்கை.!
பக்ரைனில் கடந்த ஒரு வருடமாக வேலையின்றி தவித்து வரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மத்திய-மாநில அரசுகள் தங்களை மீட்க கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைன் நாட்டில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்காக சென்றிருந்தனர்.
இந்நிலையில், அந்த தனியார் நிறுவனம் திடீரென பணி நாட்கள் முடிந்து விட்டதாக கூறி, வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. ஒரு வருடமாக சம்பளம் வழங்கப்படமாலும், அவர்களது விசாவை வழங்காமல் இழுத்தடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
சுமார் ஒரு வருடமாக வேலையில்லாமல் உணவின்றி தவிப்பதால் சொந்த நாட்டிற்கு திரும்ப உதவுமாறு கண்ணீர் மல்க வாட்ஸ் ஆப்பில் வீடியோவாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களை மீட்க கோரி குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
Comments