ஆயுஷ்மன் மருத்துவ காப்பீடு திட்டத்தை மேலும் 40 கோடி பேருக்கு விரிவுபடுத்த மத்திய அரசு திட்டம்.!

0 5540

ஆயுஷ்மன் மருத்துவ காப்பீடு திட்டத்தை மேலும் 40 கோடி பேருக்கு விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுவரை அரசு அல்லது காப்பீடு நிறுவனங்களில் பாதுகாப்பை பெறாத மக்களுக்கு குறைந்த பிரிமீயம் கட்டணத்தில் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 50 கோடி பேர் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமரின் பாரத் ஆயுஷ்மன் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச காப்பீடு வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்களின் காப்பீட்டுத் தொகையில் இருந்து மூன்றில் ஒரு பங்கு பிரிமீயத்துக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. பொருளாதாரச் சூழலால் மருத்துவ பாதுகாப்பை தவற விடும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இத்திட்டம் பெரும் பயன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments