7-வது ராய்சினா சர்வதேச மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.. 90 நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் 210 பேர் மாநாட்டில் பங்கேற்பு
டெல்லியில் 7-வது ராய்சினா சர்வதேச மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். போலந்து, சுலோவேனியா உள்ளிட்ட 90 நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.
நாளை மாநாடு முடிவடைய உள்ள நிலையில் ஜனநாயக மறுபரிசீலனை, பருவநிலை மாற்றத்தை கையாளுதல் உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகின்றன.
மாநாட்டின் இடையே பல்வேறு நாட்டு அமைச்சர்களுடன், இந்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். முன்னதாக தொடக்க விழாவில் பேசிய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரே வர்த்தக பாதயை பயன்படுத்துவதாக கூறினார்.
உக்ரைன் போரின் முடிவு ஐரோப்பாவின் எதிர்காலத்தை மட்டுமல்ல இந்தோ -பசிபிக் பிராந்தியம், உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என்றார்.
Comments