காவல் கரங்கள் மூலம் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் மீட்பு.. சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்

0 3187
காவல் கரங்கள் மூலம் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் மீட்பு.. சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை காவல் துறையின் காவல் கரங்கள் என்கிற உதவி மையம் மூலம் கடந்த ஓராண்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

காவல் கரங்கள் முதலாம் ஆண்டு நிறைவு விழா எழும்பூர், இராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையார் சங்கர் ஜிவால், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டு, காவல் கரங்கள் முதலாம் ஆண்டின் சாதனை மலரை வெளியிட்டனர். அதனை தொடர்ந்து தன்னார்வலர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments