டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் எலன் மஸ்க்.!
டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்கிடம் விற்க ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு உலக பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் முன் வந்தார்.
ஒரு பங்கை சந்தை விலையை விட 15 சதவீதம் அதிகமாக விலை கொடுத்து 54.20 டாலருக்கு வாங்கத் தயார் என்றும் அறிவித்தார். இது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், எலான் மஸ்கின் அழைப்பை டிவிட்டர் நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளது.
டிவிட்டரை சுதந்திரமாகப் பயன்படுத்தும் சமூக ஊடகமாக மாற்றுவேன் என்று தெரிவித்துள்ள எலன் மஸ்க், சுதந்திரமான பேச்சுரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை என்று குறிப்பிட்டுள்ளார். மனித குலத்தின் எதிர்காலம் இதில் விவாதிக்கப்படுவதாகவும் எலன்மஸ்க் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments