எதிர் காலத்தின் டெஸ்லா மாட்டு வண்டி என ஆனந்த் மகேந்திரா ட்விட்டரில் பதிவு.!
மாட்டு வண்டியை இந்தியாவின் ஒரிஜினல் மற்றும் எதிர்காலத்தின் டெஸ்லா என ட்விட்டரில் பதிவிட்டு அதில் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்கை டேக் செய்து தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வெளியிட்ட பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இரு மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில் சிலர் படுத்துறங்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆனந்த் மகேந்திரா, இந்தியாவில் முற்றிலும் தானாக இயங்கக் கூடிய டெஸ்லா என பதிவிட்டார்.
மேலும் கூகுள் மேப் தேவையில்லை, எரிபொருள் வாங்க வேண்டிய அவசியமில்லை, மாசு பிரச்சினை கிடையாது என்றும், பணியிடத்திற்கும் வீட்டிற்கும் தானாக கொண்டு செல்லும் என்றும் பதிவிட்டார். அதனை வரவேற்று, மாட்டு வண்டிகளுடனான சிறு வயது நினைவுகளை பகிர்ந்து பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Comments