முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலியில் கலந்துரையாடல்.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
கொரோனா மீண்டும் பரவாமல் தடுப்பது குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் கலந்து கொள்கிறார்.
இந்தியாவில் டெல்லி, ஹரியானா, மகாராஷ்ட்ரா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக 4 வது அலை பரவத் தொடங்கிவிட்டதாகவும் கருதப்படுகிறது.முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும், டெல்லி, தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், முகக் கவசம் அணியவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக நாளை ஆலோசனை நடத்துகிறார்.
இதில் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட தென் மாநில முதலமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். மேற்குவங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது.
Comments