தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களை ரூ.7,000 கோடி செலவில் மேம்படுத்த திட்டம்.!
தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களை ஏழாயிரம் கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலைய தென்மண்டல செயல் இயக்குனர் சஞ்சீவ் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டபின் பேட்டியளித்த அவர், சூரிய மின் சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டு, நவீன முறையில் முனையம் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
புதிய முனையத்தில் 600 உள்நாட்டு பயணிகள், 2 ஆயிரத்து 300 வெளிநாட்டு பயணிகளை ஒரே நேரத்தில் கையாள முடியும் என குறிப்பிட்ட அவர், தூத்துக்குடி விமான நிலையம் பெரிய ரக விமானங்கள் கையாளும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.
மேலும், சென்னை விமான நிலையத்தில் பழைய முனையங்கள் இடிக்கப்பட்டு அங்கு சரக்கு சேவை, விமான பயிற்சி மையம் போன்றவை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Comments