இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்கள் முடக்கம்!
தவறான தகவல்களைப் பரப்பியதாக 16 யூடியூப் சேனல்களை இந்திய அரசு முடக்கியுள்ளது.
நாட்டின் தேசியப் பாதுகாப்பு, அயலுறவு, பொது ஒழுங்கு ஆகியன தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக இந்தியாவைச் சேர்ந்த 10 யூடியூப் சேனல்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த 6 யூடியூப் சேனல்கள் ஆகியவற்றை மத்தியச் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் முடக்கியுள்ளது.
68 கோடிக்கு மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்டுள்ள இந்தச் சேனல்கள் தவறான, சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பிப் பதற்றத்தை உருவாக்கி, சமுதாய நல்லிணக்கத்தையும் பொது ஒழுங்கையும் குலைத்ததாக அரசு தெரிவித்துள்ளது.
Comments