தமிழ்நாட்டில் மலைப்பகுதியில் உள்ள 6 இடங்களில் சூழல் சுற்றுலாத்தலங்கள் அமைக்கப்படும் - அமைச்சர்!
தமிழ்நாட்டில் மலைப்பகுதியில் உள்ள 6 இடங்களில் சூழல் சுற்றுலாத்தலங்கள் அமைக்கப்படும் என்றும், சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும் என்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வனத்துறை அறிவிப்புகளை ராமச்சந்திரன் வெளியிட்டார்.
இந்தியாவின் முதல் தேவாங்கு வன உயிரின சரணாலயம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும் என்றும் ஓசூர் கோட்டத்தில் காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் கரைகளில் பசுமைத் தோட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
Comments