தமிழ்நாட்டில் 10 இடங்களில் சிறு விளையாட்டரங்குகள் அமைக்கப்படும் - அமைச்சர்!
தமிழ்நாட்டில் 10 இடங்களில் சிறு விளையாட்டரங்கள் அமைக்கப்படும் என்றும், தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சர்வதேச பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்படும் என்றும், அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அறிவிப்புகளை மெய்யநாதன் வெளியிட்டார்.
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஐந்து கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் சர்வதேச தரத்திலான பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ஆறாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
Comments