பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரான் வெற்றி.!
பிரான்ஸ் அதிபர் பதவிக்கு ஏப்ரல் பத்தாம் நாள் நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
எவரும் 50 விழுக்காடு வாக்குகளைப் பெறாததால் முதலிரு இடங்களைப் பிடித்த இம்மானுவேல் மேக்ரான், மரின் லீ பென் ஆகியோரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 24ஆம் நாள் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது.
பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 58 புள்ளி 6 விழுக்காடு வாக்குகளுடன் இம்மானுவேல் மேக்ரான் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்வாகியுள்ளார்.
ரஷ்ய ஆதரவாளரும் வலதுசாரி வேட்பாளருமான மரின் லீ பென் 41 புள்ளி 4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.
கடந்த இருபதாண்டுகளில் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆள் என்கிற பெருமையை மேக்ரான் பெற்றுள்ளார்.
மேக்ரானின் வெற்றியை அடுத்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments