இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ரூ.15 கோடி மதிப்பில் கட்டிடங்கள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

0 3755
இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ரூ.15 கோடி மதிப்பில் கட்டிடங்கள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

39,913 சதுர அடியில் நான்கு தளங்களில் அதிகாரிகளுக்கு தனித்தனி அறை, திருக்கோயில் புத்தக விற்பனை நிலையம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது.

மேலும், 2021-2022 மானியக் கோரிக்கையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக கோவில்களில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்கள் 1,500 பேருக்கு வணி வரன்முறை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் பல்வேறூ கோவில்களில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய 425 பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆணையையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments