அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மேசைகளை உடைத்த விவகாரம்.. மாணவர்களிடம் வேலூர் ஆர்டிஓ, வட்டாட்சியர், மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

0 7449
அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மேசைகளை உடைத்த விவகாரம்.. மாணவர்களிடம் வேலூர் ஆர்டிஓ, வட்டாட்சியர், மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், மேசைகளை மாணவர்கள் அடித்து உடைப்பது போன்ற வீடியோ வெளியான நிலையில், இது தொடர்பாக மாணவர்களிடம் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு Schooமாணவர்கள் சிலர் பள்ளிநேரம் முடிந்தபின்பும் வீட்டிற்கு செல்லாமல் வகுப்பறையில் உள்ள இரும்பு மேசைகளை உடைத்தெறிந்துள்ளனர்.

ஆசிரியர்கள் கண்டித்தும் மாணவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மேசைகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், வேலூர் ஆர்டிஓ, வட்டாட்சியர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு செய்து மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments