சியுஇடி பொது நுழைவுத்தேர்வு குறித்து விளக்கமளித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய அமைச்சர் கடிதம்
CUET பொது நுழைவுத் தேர்வை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் அந்த தேர்வு குறித்து விளக்கமளித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், CUET பொது நுழைவுத் தேர்வு மாநிலங்களின் உரிமைகளில் தலையிடவில்லை என்றும், கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால் அதை மேம்படுத்தும் பணி மத்திய அரசுக்கும் உண்டு என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்களில் சேர தனியாக பயிற்சி எடுப்பதையும், கூடுதல் செலவையும் CUET தடுத்திருப்பதாகவும், இந்த தேர்வுக்கு இதுவரை மூன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே UG படிப்புகளுக்கான CUET தேர்வு நடத்தப்படுவதாகவும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
Comments