ஆட்டிசம் பாதித்த சிறுவன் இமயமலையில் 14 ஆயிரம் அடி உயரத்தில் ஏறி சாதனை

0 3613
ஆட்டிசம் பாதித்த சிறுவன் இமயமலையில் 14 ஆயிரம் அடி உயரத்தில் ஏறி சாதனை

கோவையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 12 வயது சிறுவன்  இமயமலை தொடர்களில் ஒன்றான பியாஸ் குண்ட் மலையில் 14ஆயிரம் அடி உயரத்தை ஏறிக் கடந்துள்ளான்.

சின்னவேடம்பட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி - வினய கஸ்தூரி தம்பதியின் மூத்த மகன் யத்தீந்ரா ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவராவார். இவரை  மலையேற்றத்திற்கு அனுப்பி வைத்த பெற்றோர்  நன்கு பயிற்சி பெற வைத்தனர்.

இந்நிலையில் பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஜோன்சுடன் யத்தீந்ரா இமய மலைத் தொடர்களில் ஒன்றான பியாஸ் குண்ட் மலையில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டார். 4 நாட்களில் சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தை எட்டி அசத்திய யத்தீந்ரா அங்கு தேசியக் கொடியை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments