இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த ஐரோப்பிய யூனியன் தலைவர்.!
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வான் டெர் லேயன் Ursula von der Leyen உக்ரைன் போருக்குப் பிறகு எரிபொருள் விநியோகத்துக்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை சார்ந்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
இப்போர் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஐரோப்பாவின் தேடலைத் தூண்டுகிறது, இதில் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் தங்கள் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.
பயணத்தின் முதல் நாளில், உர்சுலா வான் டெர் லேயன் ஹரியானாவின் TERI கிராமில் இளைஞர்களுடன் உரையாடினார். கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவின் எரிசக்தி பயன்பாடு இரட்டிப்பாகியுள்ளது என்றும் நாட்டின் பொருளாதாரம் நன்றாக உள்ளது என்றும் அப்போது தமது உரையில் ஊர்சுலா குறிப்பிட்டார்.
Comments