ஆடைகள், சாக்லேட்டுகள் உள்ளிட்ட 143 பொருட்களின் GST வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்.!
டி.வி, ஆடைகள், சாக்லேட்டுகள் உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் ஜிஎஸ்டியை உயர்ந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், இது தொடர்பாக மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில் கருத்துக்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, அப்பளம், வெல்லம், பவர் பேங்க், கடிகாரம், வாசனை திரவியங்கள், கண் கண்ணாடிகள், தோல் பொருட்கள் உள்ளிட்ட 143 பொருட்களில் 92% பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 18%-லிருத்து 28%-ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வரி உயர்த்த திட்டமிடப்பட்டுள்ள இந்த பொருட்களில் பெரும்பாலானவை கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் வரி குறைக்கப்பட்ட பொருட்களாகும்.
Comments