பெயிண்ட் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து, தீப்பற்றி எரிந்து சேதம்.!

0 2317

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் பெயிண்ட் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி சாலையோரம் கவிழ்ந்ததை அடுத்து அந்த வாகனம் தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

ஹைதராபாத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே கவிழ்ந்தது.

அப்போது எதிர்பாராவிதமாக லாரியில் தீப்பிடித்ததை தொடர்ந்து, கரும்புகையுடன் எரியத் தொடங்கியது. தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments