ரேக்ளா பந்தயத்தின்போது காளை முட்டியதில் பார்வையாளர் பரிதாபமாக உயிரிழப்பு.!
தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தின்போது வண்டிகள் வரும் பாதையில் வாகனத்துடன் நின்றிருந்தவரை காளை முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
150 மாட்டுவண்டிகள் பங்கேற்புடன் கோலாகலமாகத் தொடங்கிய பந்தயத்தில் மாடுகள் சீறிப் பாய்ந்தன.
சாலையோரமாக நின்று பார்வையாளர்கள் ஆரவாரம் செய்துகொண்டு இருந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவர், சாலையோரமாக இருசக்கர வாகனத்தில் நின்றவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த மாட்டுவண்டி ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் காளையின் கொம்பு முட்டி, மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
Comments