இந்தியா தனது எல்லைகளைப் பாதுகாக்க ரஷ்யாவின் உதவி தேவை - நிர்மலா சீதாராமன்

0 4062
இந்தியா தனது எல்லைகளைப் பாதுகாக்க ரஷ்யாவின் உதவி தேவை - நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக வாஷிங்டன் சென்றுள்ளர் . புளூம்பர்க் செய்தியாளர்களிடையே பேசிய போது இந்தியா அதன் பெரும்பாலான இராணுவத் தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது என்று சுட்டிக் காட்டினார்.

இந்தியாவின் அண்டை நாடு இன்னொரு அண்டை நாட்டுடன் கை கோர்க்கும் நிலை ஏற்படலாம் என்றும் இரண்டு நாடுகளுமே இந்தியாவுக்கு எதிராக இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்கு வலிமையுடன் இருக்க வேண்டும், என்று நிர்மலா சீதாராமன் சீனா மற்றும் பாகிஸ்தானை பெயர் கூறாமல் குறிப்பிட்டார். மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா நட்புடன் இருக்க விரும்புகிறது. ஆனால் ஒரு பலவீனமான நிலையில் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தியா வந்திருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுடன் விரிவான புதிய பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளார். ஆயுதங்களுக்காக ரஷ்யாவை இந்தியா சார்ந்து இருக்காமல் தவிர்ப்பதற்கான முயற்சியாக இது அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments