இந்தியாவும் இங்கிலாந்தும் முன்பை விட ஆழமான நட்புறவு கொண்டுள்ளன.. லண்டன் திரும்பிய பிரதமர் போரிஸ் ஜான்சன் டிவிட்டரில் வீடியோ வெளியீடு

0 2556
இந்தியாவும் இங்கிலாந்தும் முன்பை விட ஆழமான நட்புறவு கொண்டுள்ளன.. லண்டன் திரும்பிய பிரதமர் போரிஸ் ஜான்சன் டிவிட்டரில் வீடியோ வெளியீடு

இந்தியாவும் இங்கிலாந்தும் ஆழமான நட்புறவு கொண்டிருப்பதாகவும் முன்பை விட நெருக்கமாக இணைந்து செயல்படுவதாகவும் இந்தியா வந்து லண்டன் திரும்பிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

தமது  இந்தியப் பயணம் குறித்து டிவிட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஜான்சன், பசுமைத் தொழில்நுட்பம் பாதுகாப்புத் துறை உள்ளிட்டவற்றில் இந்தியாவுடன் இங்கிலாந்து இணைந்து செயல்படும் என்று கூறினார்.

இரு நாடுகளுக்கும் வளம் தரும் வர்த்தக உறவுகளிலும் ஒத்துழைப்பு நீடிக்கும் என்று அவர் தெரிவித்தார்.இந்தியாவில் இருந்த இரண்டு நாட்களும் அற்புதமானவை என்றும் போரிஸ் ஜான்ச ன் குறிப்பிட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments