2 நாள் பயணமாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா லெயன் இந்தியா வருகை.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடியுடன் ஆலோசனை..!
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன் 2 நாள் பயணமாக இந்தியா வந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக உர்சுலா பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.
நாளை பிரதமர் மோடி துவக்கி வைக்கும் ராய்சினா மாநாட்டில், உர்சுலா லெயன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திக்கும் உர்சுலா, தொடர்ந்து பிரதமர் மோடியுடன் இரு தரப்பிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கத்தின் இழப்பு, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம், பாதுகாப்பு, பொருளாதாரம், இலவச வர்த்தக ஒப்பந்தம், இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள், ரஷ்யா - உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லியில் உள்ள Energy and Resources Institute ஆராய்ச்சி நிறுவனத்தில் மாணவர்களிடையே பருவநிலை மாற்றும் குறித்து உரையாற்றுகிறார். மேலும் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
Comments