நைஜீரியாவில் சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்ததில் 100 பேர் தீயில் கருகி பலி.!
தெற்கு நைஜீரியாவில் சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்ததில் 100 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இமோ மாகாணத்தில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் இயங்கி வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ பரவி ஆலை வெடித்ததில் 100 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
கருகிய உடலகள் சாலைகளிலும், மரக்கிளைகளிலும் சிதறிக் கிடப்பதாக போலீசார் தெரிவித்தனர். திருட்டுக் கும்பல்கள் எண்ணெய்யை களவாட குழாய்களை உடைத்திருக்கலாம் என்றும் அதன் மூலம் தீ பற்றி பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
Comments