யூஸ்லெஸ் பெல்லோஸ்... வெட்டியா என்ன பண்றீங்க ..? அரசு ஊழியர்களுக்கு ஆப்பு..! பிரித்தெடுத்த ஜில்லா கலெக்டர்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி செய்யாமல் மெத்தனமாக இருந்த அரசு அலுவலர்களை ஆய்வுக்கு சென்ற மாவட்ட கலெக்டர் , வார்த்தைகளால் வறுத்தெடுத்த சம்பவத்தால் பரபரப்பு உண்டானது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருடாந்தர ஆய்வு நடைபெற்றது. ஆய்வுக்கு சென்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஒவ்வொரு அலுவலரிடம் சென்று கோப்புகளை திறந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சில கோப்புகளின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய ஆட்சியர், பொதுமக்களிடம் பெற்ற கோப்புகளின் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என ஆவேசமானார்.
தொடர்ந்து ஒரு அலுவலரிடம், கோப்புகளை பெற்று 8 மாதங்கள் ஆகிய நிலையில், கையொப்பமிட்டும், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பாமல் மறைத்து வைத்தது இருந்ததை கண்டுபிடித்த ஆட்சியர், என்னைய்யா பண்ணுறீங்க ஆபீஸ்ல? யூஸ் லெஸ் பெல்லோஸ் என்ன வேலை பாக்குறீங்க என்ன கோபமடைந்தார்.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோப்புகள் வருகின்றதா ? என கேட்பது கிடையாதா? BDO க்களுக்கு எல்லாம் அறிவே கிடையாதா ? என கோபத்தின் உச்சத்திற்கே சென்று அதிகாரிகளை கண்டித்ததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நிசப்தமானது.
ஆட்சியர் வருடாந்திர ஆய்விற்கு ஆட்சியர் வருவது முன்னரே திட்டமிட்டு இருந்த நிலையிலும் அரசு ஊழியர்களின் அலட்சியப் போக்கால் ஆட்சியர் கோபமடைந்து அரசு ஊழியர்களை கண்டித்த சம்பவத்தால் பரபரப்பு உண்டானது.
அதே நேரத்தில் அரசு ஊழியர்கள் தங்களது மெத்தனப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு
Comments