ஆசிய மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்தியாவின் ரவி தாகியா

0 11550

மங்கோலியாவில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இன்று ஒரே நாளில் ஒரு தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்றுள்ளது.

57 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில்  இந்திய வீரர் ரவி தாஹியா கஜகஸ்தான் வீரர் கல்ஸான் - ஐ 12-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். இதோபோல் 65 கிலோ எடைப்பிரிவில், ஈரான் வீரர் ரஹ்மானிடம் தோல்வியடைந்த  இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளி பதக்கம் வென்றார்.

இதேபோல் இந்தியாவின் கவுரவ் பாலியன் 79 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கமும், சத்திவார்த் கடியன் 97 கிலோ எடைப்பிரிவில் வெண்கலமும், நவீன் 70 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments