பயணியர் வாகனங்களின் விலையை 1.1 சதவீதம் உயர்த்தியுள்ளது டாடா மோட்டார்ஸ்

0 3264

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பயணியர் வாகனங்களின் விலையைச் சராசரியாக 1 புள்ளி 1 விழுக்காடு உயர்த்தியுள்ளது.

உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட கச்சாப் பொருட்களின் விலை உயர்வு, கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வாகனத் தயாரிப்புக்கான அடக்கச் செலவு அதிகரித்துள்ளது.

இதனால் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் கார், வேன், பேருந்து உள்ளிட்ட பயணியர் வாகனங்களின் விலையைச் சராசரியாக 1 புள்ளி 1 விழுக்காடு உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments