தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!
வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனத்தால் தென்தமிழகம், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தென்தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
வருகிற 25, 26, 27 ஆகிய நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அவற்றையொட்டிய மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
அதிகப்பட்சமாக நாகர்கோவில், தக்கலை ஆகிய இடங்களில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுவதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments