காணாமல் போன கணவரை ஆட்டோவில் ஊர் ஊராகத் சென்று தேடி அலையும் மனைவி!

0 11283

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஞாபக மறதி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு காணாமல் போன கணவனை தினசரி சுமார் ஆயிரத்து 600 ரூபாய் செலவழித்து ஆட்டோவில் ஊர் ஊராகச் சென்று அவரது மனைவி தேடி வருகிறார்.

முத்தம்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவராமன் - பழனியம்மாள் தம்பதி. வாழப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு வெளிப்புறம் அமர்ந்து விண்ணப்பம் எழுதிக் கொடுத்து வந்த சிவராமன், கடந்த 7ஆம் தேதி வயல் பகுதிக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக ஞாபக மறதி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள சிவராமன், பொருட்களை எங்கே வைத்தோம் என்பதை மறப்பது, வீட்டுக்குச் செல்லும் வழியை மறந்து வேறு தெருப்பக்கம் செல்வது என அவதிப்பட்டு வந்தார் என்று கூறப்படுகிறது.

கணவரை பல இடங்களில் தேடிவிட்டு போலீசில் புகாரளித்த பழனியம்மாள், ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் சிவராமனின் புகைப்படத்துடன் கூடிய பேனர், ஒலிப்பெருக்கியை வைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று தேடி வருகிறார்.

ஆரம்பத்தில் ஆட்டோவுக்கு வாடகை வாங்கிய ஓட்டுநர், பழனியம்மாளின் நிலையை உணர்ந்து, டீசல் செலவுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் என்று கூறியிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments