உத்தரப்பிரதேசத்தில் மாஃபியாக்களிடமிருந்து ரூ.268 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் - உள்துறை கூடுதல் செயலாளர்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மாஃபியாக்களிடம் இருந்து 268 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில உள்துறை கூடுதல் செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சொத்தையும் மாஃபியாக்களிடமிருந்து பறிமுதல் செய்யும் போது, கட்டுமானம் சட்டப்பூர்வமானதா இல்லையா என்பதை ஆராய்ந்த பிறகே அதனை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.
ஒரு குற்றவாளியின் நிதி ஆதாரம் கைப்பற்றப்பட்டால், அது அடி வரை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் குற்றங்கள் ஒழியும் வரை தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.
குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்களின் தண்டனை விகிதத்தை அதிகரிக்கவும் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments