மும்பையில் தங்க நகை நிறுவனத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.9.78 கோடி பணம், 19 கிலோ வெள்ளி பறிமுதல்
மும்பையில் தங்கம் வெள்ளி விற்பனை நிறுவனத்தில் சோதனையிட்ட சரக்கு சேவை வரித்துறையினர் 19 கிலோ வெள்ளிக் கட்டிகள், 9 கோடியே 78 இலட்ச ரூபாய் பணக் கட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.
மும்பை சவேரி பஜாரில் உள்ள சாமுண்டா பில்லியன் கம்பெனி வரி ஏய்ப்பதாக வந்த குற்றச்சாட்டையடுத்துச் சரக்கு சேவை வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது சுவரிலும், தரையில் தள ஓட்டுக்கு அடியிலும் மறைத்து வைத்திருந்த வெள்ளிக் கட்டிகள், பணத்தாள் கட்டுகள் ஆகியவற்றைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த நிறுவனத்தை மூடி முத்திரையிட்டனர்.
Comments