போஸ்னியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பெண் உயிரிழப்பு.!
போஸ்னியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மோஸ்டர் நகருக்கு தென்கிழக்கே 42 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 புள்ளி 7 ஆக பதிவாகி உள்ளது.
அதிர்வு காரணமாக ஸ்டோலாக் நகரத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது பாறை உருண்டு விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 28 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தாகவும், அவரது பெற்றோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
போஸ்னியா முழுவதும் மட்டுமல்லாமல் செர்பியா, குரோஷியா, மாண்டீனீக்ரோ உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
Comments