ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு.. 33 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில், மசூதியை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்ததாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
வடக்கு மாகாணமான குண்டூஸில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 43 பேர் பேர் படுகாயமடைந்ததாகவும் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பெற்றுள்ளது.
இதற்கிடையில் மசார்-இ-ஷெரீப்பில் பகுதியில் உள்ள மசூதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபரை தாலிபான்கள் கைது செய்துள்ளனர்.
Comments