மயிலாடுதுறையில் அனுமதியின்றி நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது.!
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில், அனுமதியின்றி நாட்டுவெடி தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், சுமார் 50 கிலோ வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.
சிதம்பரத்தார் என்ற பெயரில் இயங்கி வரும் பட்டாசு விற்பனைக்கு மட்டும் அனுமதி பெற்ற கடையில் ஆய்வு செய்த போது நாட்டு வெடிகள் மற்றும் அதனை தயாரிக்க பயன்படும் கரித்துகள்கள், அமோனியா சல்பர் உள்ளிட்ட மூலப்பொருட்கள் ஏராளமாக இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் மகேஷ் குமாரையும் ஊழியர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
Comments