எழுப்புதல் கூட்டம்.. காதலில் கவிழ்ந்த சில்பான்ஸ் போதகர்..! காதலிக்கு ரூ.1 1.2 கோடி பரிசு..

0 11578
மத எழுப்புதல் கூட்டம் நடத்துவதாக கூறி இளம் பெண்ணை காதல் வலையில் வீழ்த்திய மத போதகர் ஒருவர் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் பணத்தை மனைவியின் வங்கி கணக்கில் இருந்து திருடி காதலியுடன் தப்பிச்சென்றபோது போலீசில் சிக்கினார்

மத எழுப்புதல் கூட்டம் நடத்துவதாக கூறி இளம் பெண்ணை காதல் வலையில் வீழ்த்திய மத போதகர் ஒருவர் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் பணத்தை மனைவியின் வங்கி கணக்கில் இருந்து திருடி காதலியுடன் தப்பிச்சென்றபோது போலீசில் சிக்கினார்

கேரள மாநிலம் கோழிக்கோடு கோடஞ்சேரி பகுதியை சார்ந்தவர் 52 வயதான மதபோதகர் Shiju K Jose. இவருக்கும் திருச்சூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.

மதபோதகர் ஷிஜு -வின் மனைவி அமெரிக்காவில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். ஷிஜு, கோழிக்கோடு பகுதியில் உள்ள பிரபலமான மத அமைப்பு ஒன்றின் போதகராக பணிபுரிந்து வருகிறார்.

அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் பிரார்த்தனை செய்வதாகவும், அவர்களுக்காக கடவுளிடம் மன்றாடுவதுமாக கூறி எழுப்புதல் கூட்டங்களை நடத்தி வந்துள்ளார்.

தனது முகநூல் மற்றும் யூடியூப் பக்கங்களில் பிரார்த்தனை செய்வதை வீடியோவாக பதிவு செய்து பதிவேற்றுவது மற்றும் ஆன்லைன் பிரார்த்தனை செய்வது போன்ற பணிகளையும் செய்து வந்துள்ளார்.

இதனிடையே முகநூல் ஆன்லைன் பிரார்த்தனை பங்கேற்ற காயங்குளம் பகுதியை சார்ந்த 30 வயதுடைய பிரியங்கா என்பவருக்கும் போதகர் ஷிஜுவுக்கும் இடையே இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி உள்ளது . விடுதிகளில் சென்று அந்தப் பெண்ணுடன் தனிமையில் ஜெபம் செய்யும் அளவுக்கு போதகர் அத்துமீறியுள்ளார்.

இதற்காக மதபோதகர் அவ்வப்போது  மனைவிக்கு தெரியாமல் கணக்கில் இருந்து பெருந்தொகையை எடுத்து வந்து அந்தப்பெண்ணுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

ஒரு நாள் காதலியுடன் தனிமையில் இருக்கும் போது போதையில் இருந்த மதபோதகர் தனக்கும் மனைவிக்கும் சொந்தமான கூட்டு வங்கி கணக்கில் இருந்து 1 கோடி 20 லட்சம் ரூபாயை காதலி பிரியங்காவின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

இதைத் தெரிந்து கொண்ட அவரது மனைவி மதபோதகரிடம் இவ்வளவு பெரிய தொகையை எதற்காக எடுத்தீர்கள் என்று கேட்டபோது புண்ணிய காரியங்கள் செய்வதற்காக எடுத்ததாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த மனைவி அமெரிக்காவில் இருந்து கொண்டே ஊரில் உள்ள உறவினர்களிடம் தனது கணவரின் சில்பாண்ஸ் வேலைகள் குறித்து விசாரித்துள்ளார்.இதில் மதபோதகருக்கும் , பிரியங்காவுக்கு மிடையே திருமணம் கடந்த தவறான உறவு இருப்பது தெரியவந்தது.

உடனே அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த மதபோதகரின் மனைவி , தனது கணவர் வங்கி கணக்கில் செய்த கையாடல் குறித்து ஆலப்புழா காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து வங்கி கணக்குகளை வைத்து  விசாரணை மேற்கொண்ட காயங்குளம் போலீசார் கையாடல் செய்யப்பட்ட பெருந்தொகை போதகரின் காதலி பிரியங்காவின் வங்கி கணக்கில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதற்க்கிடையே மாட்டிக் கொள்வோம் என தெரிந்து கொண்ட மதபோதகர் காதலியுடன் தலைமறைவானார். ஊழியம் செய்வதாக கூறி காதலியுடன் நேபாளத்தில் பதுங்கி இருந்த அவர் அங்கிருந்து டெல்லி வழியாக வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்காக டெல்லி விமான நிலையம் சென்றுள்ளார்.

கேரளா போலீசார் இவர்களது புகைப்படங்களை விமான நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருந்ததால் விமான நிலைய அதிகாரிகள் இவர்களை கைது செய்தனர்.

பின்பு  இருவரையும் கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஊருக்கெல்லாம் எழுப்புதல் கூட்டம் நடத்திய போதகர் ஷிஜூவிடம் போலீசார் சிறப்பு கவனிப்புடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments