ஊரடங்கு விதிகளை மீறியதாக போரிஸ் ஜான்சனுக்கு 2-வது முறையாக அபராதம் விதிப்பு
ஊரடங்கு விதிகளை மீறியதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 2-வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 மே மாதம் 20ஆம் தேதி பிரதமர் அலுவலகம் உள்ள டவுன் ஸ்டிரிங் பகுதியில் முக்கிய அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்ட விருந்தில் போரிஸ் ஜான்சன் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
முதல் முறையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட போது விதிகளை மீறி நடத்தப்பட்ட வசந்த கால வரவேற்பு நிகழ்ச்சியில் போரீஸ் ஜான்சன் 25 நிமிடங்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் அவருக்கு இந்திய மதிப்பில் ஏறத்தாழ 20 ஆயிரம் ரூபாய் வர போலீசார் அபராதம் விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிறந்த நாள் விருந்து சர்ச்சையில் சிக்கி மன்னிப்பு கோரிய போரிஸ் ஜான்சன் தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
Comments