சாலையில் எழும் மோதல்கள் குறித்து வைரலான வீடியோ வெளியிட்ட உத்தரப்பிரதேச போலீசார்.. மோதலை ஏற்படுத்துபவர்களுக்கு கடும் எச்சரிக்கை
சாலையில் அத்துமீறல்களால் எழும் மோதல்கள் குறித்து வைரலான வீடியோவை வெளியிட்ட உத்தரப்பிரதேச போலீசார் வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்து ஓட்டுனருக்கும் வாடகைக் கார் ஓட்டுனருக்கும் சாலையில் வாக்குவாதம் எழுந்து மோதலாக வெடித்த வீடியோ காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் பேருந்து ஓட்டுனர் வாடகைக் காரில் வந்த 2 பேரால் தடி கொண்டு சரமாரியாக தாக்கப்பட்டார்.
வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதித்து நடக்குமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்
Comments