பாகிஸ்தானில் உயர்கல்வி பயில வேண்டாம் - ஏஐசிடிஇ, யுஜிசி அறிவிப்பு.!
பாகிஸ்தானில் உயர்கல்வி பயில வேண்டாம் என ஏஐசிடிஇ, யுஜிசி கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த அறிக்கையில், பாகிஸ்தானில் பெற்ற கல்வி மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்பை பெற முடியாது என்றும் மேற்படிப்பை தொடர முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது பிள்ளைகள் பாகிஸ்தானில் பட்டம் பெற்ற பின்னர், இந்தியக் குடியுரிமை பெற்றிருந்தால், உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதி சான்றிதழைக் கட்டாயம் பெறவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments